×

அல்லு அர்ஜுன், ராம்சரண் இணையும் படம்

ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ராம்சரண் இணையும் படம் பல மொழிகளில் உருவாக உள்ளது. புஷ்பா படம் மூலம் அல்லு அர்ஜுன் பான் இந்தியா ஸ்டாராகிவிட்டார். அதேபோல் ஆர்ஆர்ஆர் படம் மூலம் ராம்சரணும் பான் இந்தியா ஸ்டாராகியுள்ளார். அல்லு அர்ஜுனும் ராம்சரணும் உறவினர்கள். இவர்கள் எவடு என்ற படத்தில் நடித்தார்கள். ஆனால் இருவரும் சேர்ந்து வரும் காட்சி படத்தில் இல்லை. கதைப்படி அல்லு அர்ஜுன் இறந்த பிறகு ராம்சரண் படத்தில் வருவார். இதில் அல்லு அர்ஜுன் கவுரவ தோற்றத்தில்தான் நடித்திருந்தார். இதனால் இப்போது இருவரையும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க பலர் முயற்சித்து வந்தனர். அதில் தயாரிப்பாளரும் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் வெற்றி பெற்றிருக்கிறார். ‘அல்லு அர்ஜுன், ராம்சரண் இருவரும் எவடு படம் வரும்போது, வளரும் ஹீரோக்கள். ஆனால் இப்போது இருவருமே பெரிய ஸ்டார்ஸ். அதனால் அவர்களை இணைத்து நடிக்க வைப்பது சவாலான விஷயம். இருவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் கதை அமைய வேண்டும். மாஸ் படமாக அது இருக்க வேண்டும். அத்தகைய இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறேன். முன்பே இந்த படத்துக்கு சரண் அர்ஜுன் என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறேன்’ என்றார்….

The post அல்லு அர்ஜுன், ராம்சரண் இணையும் படம் appeared first on Dinakaran.

Tags : allu arjun ,ramsaran ,Hyderabad ,Pushba Picture ,
× RELATED புஷ்பா 2 இரண்டாவது பாடல் வெளியீடு